அன்பு நாவலை எழுதத் துணிந்ததுதான் என் வாழ்வில் நான் எடுத்த மிகத் துணிச்சலான முடிவு. இது வெளிவந்தால் என் உற்றம் சுற்றம் நட்பு என்று பலரும் என்னை விட்டு நிரந்தரமாகப் பிரிந்து போகலாம். நான் ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். நான் பிரேதங்களின் மீது நடந்து எழுதுகிறேன் என்று. என் வாழ்வை எரித்துக் கொண்டு எழுதுகிறேன். என்ன ஆனாலும் சரி என்று துணிந்து எழுதியிருக்கிறேன். இதை எழுதியே ஆக வேண்டும். உலகளந்தான் என்ற பாத…
அன்பு நாவலை எழுதத் துணிந்ததுதான் என் வாழ்வில் நான் எடுத்த மிகத் துணிச்சலான முடிவு. இது வெளிவந்தால் என் உற்றம் சுற்றம் நட்பு என்று பலரும் என்னை விட்டு நிரந்தரமாகப் பிரிந்து போகலாம். நான் ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். நான் பிரேதங்களின் மீது நடந்து எழுதுகிறேன் என்று. என் வாழ்வை எரித்துக் கொண்டு எழுதுகிறேன். என்ன ஆனாலும் சரி என்று துணிந்து எழுதியிருக்கிறேன். இதை எழுதியே ஆக வேண்டும். உலகளந்தான் என்ற பாத்திரம்தான் இதற்கான விசையை எனக்கு அளித்தது. படித்தால் உங்களுக்குப் புரியும். வெறித்தனமாக எழுதினேன். ஒரே வாரத்தில் எழுதினேன்.
உலகில் உள்ள எல்லா இலக்கியப் படைப்புகளும் அன்பையே மையமாகக் கொண்டு இயங்குகின்றன. ஆனால் அன்பு எத்தனை பெரிய வன்முறைக்கான கண்ணி என்பதை இந்த நாவல் சுட்டுகிறது. உலக இலக்கிய வரலாற்றில் அன்புக்கு எதிராக எழுதப்பட்ட முதல் நாவல் இதுதான் என்று துணிந்து கூறுகிறேன். அதற்காக எல்லோரும் கத்தியை எடுத்துக் கொண்டு ஒருவரை ஒருவர் குத்துக் கொல்லுங்கள் என்று சொல்லவில்லை. அன்பு என்று சொல்பவர்களின் கைகளில் உள்ள ரத்தக் கறை பற்றியே இந்த நாவல் பேசுகிறது.
காஃப்காவின் கே எப்படி இலக்கியத்தில் முக்கியமோ அதே அளவுக்கு முக்கியம் பெறுவார்கள் இந்த நாவலின் பெருமாளும் உலகளந்தானும். பல பக்கங்களை நான் உன்மத்த நிலையில் எழுதினேன். இல்லாவிட்டால் ஒரு முந்நூறு பக்க நாவலை ஒரே வாரத்தில் எழுதியிருக்க முடியாது. பேய் வேகம் என்று சொல்லலாம். தட்டச்சு செய்த வேகத்தில் நரம்புகள் நடுங்குகின்றன. தோள்பட்டை கடுக்கிறது.
மோகினித்தீவு தமிழில் பிரபலமான புதினங்களை எழுதிய கல்கி கிருஷ்ணமூர்த்தி அவர்களினால் எழுதப்பட்ட ஒரு குறு நாவலாகும். திரைப்படக் கொட்டகையில் ஆங்கிலத் திரைப்படத்தைப் பார்த்து …
கவிஞரின் கதைகளிலே சொக்கி போயிருக்கிறோம். அவரது கட்டுரைகளிலே கர்வம் கொண்டிருக்கிறோம். அவரது கதைகள் நம்மை கண்கலங்க வைத்திருகின்றன. அவரது சமூக நாவல்கள் நம் சிந்தனைக்கு வி…
“எம்.டி. வாசுதேவன் நாயரின் இந்த நாவல் காத்திருப்புகளின் கதை. காலமும் இடமும் மனங்களும் இந்தக் கதையில் காத்திருக்கின்றன. கோடை நாட்கள் குளிர் பருவம் வரக் காத்திருக்கின்றன. தன்ன…
சிவன், தன் படைகளைத் திரட்டத் தொடங்கிவிட்டார். நாdகர்களின் தலைநகரான பஞ்சவடியை அடைந்தவுடன், தீமையின் உண்மையான சோரூபம், ஒரு வழியாக வெட்ட வெளிச்சமாகிறது. வீரர்களுக்கெல்லாம்…
ரஜினி காந்த், ஸ்ரீதேவி நடிப்பில், 1977 ஆம் ஆண்டு ஆர். பட்டாபிராமன் இயக்கத்தில் வெளிவந்த 'காயத்ரி' திரைப்படத்தின் மூலவடிவாமாக அமைந்த நாவல் இது.
தினமணி கதிரில் 19…
எக்ஸிஸ்டென்ஷியலிசமும் ஃபேன்ஸி பனியனும் வெளிவந்து இருபதாண்டுகள் ஆகிறது. இப்போதும் இந்த நாவல் கொண்டாடப்படுவதாகவும் சகித்துக் கொள்ளமுடியாததாகவும் இருப்பதற்கு காரணம் தமிழ்ப் ப…
ஜாதா எண்பதுகளில் ஆனந்த விகடனில் எழுதிய விஞ்ஞானத் தொடர்கதை. கி.பி 2022--ல் நடப்பதான இந்தக் கதையில் ‘ஜீனோ’ என்கிற ரோபாட் நாய்தான் கதாநாயகன். கதையில் வேறு கதாநாயகனே கி…
“இந்தப் படைப்பை விவசாயி மகனாக இல்லாத ஒருவன் ஜீவனுள்ளதாக எப்படிச் செய்ய முடியும்?மூன்றாண்டுகள் ஆராய்ந்தேன் ; பத்துமாதங்கள் எழுதினேன் . எங்கள் மண்ணின் மக்கள் ஊடாக உலகத் துயரத்த…
இன்றைய தலைமுறை தெரிந்து கொள்ள வேண்டிய தமிழின் தலைசிறந்த எழுத்தாளர்கள் பற்றிய ஒர் அறிமுகம்.
ப்ளாட்டிங் பேப்பரிலிருந்து மறைவது போல் இங்கே பல கலைஞர்களின், எழுத்தாளர்…
விஷ்ணுபுரம் ஒரு ‘காவிய நாவல்’. தன்னை ஒரு காவியமாகவும் கட்டமைத்துக்கொண்டு தன்னை எழுதும் பொறுப்பை தானே எடுத்துக் கொண்ட படைப்பு. ஆகவே, இதில் எல்லாத் தரப்புகளும் பேசப்படுகி…
கடல் புறா எழுத்தாளர் சாண்டில்யன் அவர்களால் எழுதப்பட்ட ஒரு வரலாற்றுப் புதினம். சிறீ விசய நாட்டில் இருந்து சோழர் உதவி தேடி இளவரசருக்கும் அவரது மகளுக்கும் சோழ இளவரசரான அந…
விஜய் அண்டனி நடிப்பில் சமீபத்தில் வெளியான 'சைத்தான்' திரைப்படத்தின் மூலவடிவமாக அமைந்த நாவல் இது.
‘ஆ..! 1992ல் ஆனந்த விகடனில் தொடர்கதையாக வெளியானது. கதையின் ந…