ஆசிரியர் இருபத்தைந்து ஆண்டுக்காலம் பணியாற்றிய தொலைத்தொடர்புச்சூழல் இக்கதைகளில் உள்ளது. ஆனால் அந்த அலுவலகச் சூழல், தொழில்நுட்பச்சூழல் ஓர் அறியப்படாத வாழ்க்கைக் களம் மட்டுமாகக் காட்டப்படவில்லை. தொலைதொடர்பு என்ற செயல்பாடு குறியீடாகவே எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. அதன் வழியாக விரியும் கதைகள் வாழ்க்கையின், பிரபஞ்சத்தின் அறியாத நெறிகளைச் சொல்லிவிட முயல்கின்றன. தொழில்நுட்பம் கவித்துவக் குறியீடாக ஆவதனூடாகவ…