ஐந்து நாட்களுக்கு முன்பு யெக்கரின் கார் கண்ணாடிகள் உடைக்கப்பட்டிருந்தன. டயர் பஞ்சராக்கப்பட்டிருந்தது. யெக்கருக்குத் தன் புதல்வன் கமாலின் ஞாபகம் வந்தது. கமாலும் இப்படித்தான் மூளைச் சலவை செய்யப்பட்டிருந்தான். இவர்கள் யாரும் இனிமேல் சிறுவர்கள் அல்ல. இவர்கள் மரணத்தோடு ஒப்பந்தம் செய்து கொண்டவர்கள். மனிதர்களின் குரல்வளையைக் கடித்துக் குதறும் நாய்களைப் போல் இவர்கள் பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்…
ஐந்து நாட்களுக்கு முன்பு யெக்கரின் கார் கண்ணாடிகள் உடைக்கப்பட்டிருந்தன. டயர் பஞ்சராக்கப்பட்டிருந்தது. யெக்கருக்குத் தன் புதல்வன் கமாலின் ஞாபகம் வந்தது. கமாலும் இப்படித்தான் மூளைச் சலவை செய்யப்பட்டிருந்தான். இவர்கள் யாரும் இனிமேல் சிறுவர்கள் அல்ல. இவர்கள் மரணத்தோடு ஒப்பந்தம் செய்து கொண்டவர்கள். மனிதர்களின் குரல்வளையைக் கடித்துக் குதறும் நாய்களைப் போல் இவர்கள் பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்கள் கொலை செய்யும் போது இவர்களின் புருவம் கூட உயர்வது இல்லை . இந்தச் சிறுவர்களுக்கு இந்த உலகத்தில் பெற்றுக்கொள்ள எதுவும் இல்லை. கலாச்சாரமோ, இலக்கியமோ, இசையோ, நடனமோ, பொழுதுபோக்கோ, விளையாட்டோ, உறவோ, பந்தமோ, பாசமோ, கனவுகளோ, நம்பிக்கையோ எதுவுமே இல்லை. இவர்கள் மற்றவர் உயிரை எடுக்கவும் தங்கள் உயிரைக் கொடுக்கவும் தயாராக இருக்கிறார்கள் 'சத்தியத்தின் வாழ்க்கை வேறோர் இடத்தில் இருக்கும்போது நியாயமும் தர்மமும் இல்லாத, பாவங்கள் மட்டுமே நிறைந்த இந்த உலக வாழ்க்கையில் என்ன இருக்கிறது?' என்பதே இந்தச் சிறார்களின் மனதில் நிறைந்திருக்கும் கேள்வி.
எண்பதுகளின் துவக்கத்தில் பெங்களூரிலிருந்து வெளிவந்த ‘இங்கே இன்று’ என்ற பத்திரிகையில்தான் ‘கோணல்பக்கங்கள்’ என்ற பத்தி தொடராக எழுதப்பட்டது. அதன் தொடர்ச்சி மீண்டும்…
காடு என்பது கனவு நிலமோ சுற்றுலாத் தலமோ அல்ல. தாவரங்கள் முதல் தொல்குடிகள் வரை பிணைந்து வாழும் பல்லுயிர் உலகம். இப்புரிதல் இன்றிப் பச்சையம் கொல்லும் தன் பணி நிமித்தம் ஓர் உல்ல…
நாடு என்பது மக்களின் தொகுப்பு; அது நிலங்களின் தொகுப்பு அல்ல. சமூகத்தின் மீது உண்மையான அக்கறை கொண்ட ஒருவர் முதலும் இறுதியுமாய் மக்களுக்குத்தான் விசுவாசமாக இருக்க வேண்டும்…
நாம் அறிந்த தமிழகத்தின் அறியாத பரிமாணம் இந்நூல். ஒரு பொருட்டாக நாம் கருதாத ஒரு செய்தியை எடுத்துக்கொண்டு அதில் வரலாறும் பண்பாடும் எவ்வாறு படிவம் படிவமாகப் படிந்துள்ளன என்…
பிரபாகரனின் மரணம், அவரது வாழ்வைக் காட்டிலும் அதிகம் செய்தி சுமந்தது. முப்பத்தி மூன்றாண்டு கால ஆயுதப் போராட்டம் நிகழ்த்திய ஒரு போராளி, ஒட்டுமொத்த ஈழத் தமிழர்களுக்கும் காவல்…
நுண்ணதிகார வலைப்பின்னல்களாலும் மின்னணு ஊடகங்களாலும் முற்றிலுமாக மாற்றியமைக்கப்பட்டுவிட்ட மனித அனுபவத்தையும் புற உலக எதார்த்தத்தையும் எதிர்கொள்கிறது ராஸ லீலா . இங்கு அடைய…
ஆறு ஆண்டு கால ஆராய்ச்சி. ஆதாரபூர்வமான தகவல்கள். சற்றும் விறுவிறுப்பு குறையாத எழுத்து. உலகை அச்சுறுத்தும் அனைத்துத் தீவிரவாத இயக்கங்களைப் பற்றியும் மிக விரிவான அறிமுகத்…
"ஒரு இடம் என்பது அங்கே வாழ்ந்த மனிதர்களின் பெருமூச்சுகளையும் கண்ணீர்த் துளிகளையும் சிரிப்பின் அலைகளையும் வேட்கையின் கங்குகளையும் இசையையும் நாட்டியத்தையும் நூற்றாண்டு நூற்றாண்…
வாசிக்கிற வழக்கம் குறைந்து போனதால் உருவாகியிருக்கும் தரவீழ்ச்சி அபாயகரமானது. பெரும்பாலான சமூக இழிவுகளுக்குக் காரணியாகவும் இருக்கிறது. இந்நூல் வாசிப்பதன் இடர்பாடுகளை …
அகதி முகாம்கள் உட்பட இன்று உலகளாவி பரந்து கிடக்கிறது தமிழ்ச் சமூகம். அதற்கும், ஒட்டுமொத்த மனித குலத்துக்கும் அளிக்கப்பட்ட கொடையே ஸீரோ டிகிரி. ஆனால் இந்நாவலைப் பங்களிப்பென…
ஐந்து முதலமைச்சர்களைத் தந்ததாக மார்தட்டிக் கொள்ளும் தமிழ் சினிமா, உலக சினிமா அரங்கில் பேசப்பட்டதேயில்லை.இந்தியாவில் நடந்துகொண்டிருப்பது ஜனநாயகம் அல்ல என்பது எ…
துக்ளக் இதழில் வெளிவந்து கவனத்தை ஈர்த்த 15 கட்டுரைகள் முதல் முறையாக நூல் வடிவில்.
ஒரு செருப்புக்கே இவ்வளவு யோசிக்கும் நீ உன் புருஷனைத் தேர்ந்தெடுக்கும் விஷயத்தில் க…