மாயோன், சேயோன், வேந்தன், வருணர் என நிலத் தெய்வங்கள் இருந்த தொல்காப்பியர் காலத்துத் தமிழ் மண்ணில், பிற்காலத்தில்தான் வைதிகமும் பெளத்தமும் ஜைனமும் ஆசீவகமும் தோன்றின. பெளத்தமும் ஜைனமும்போலவே ஆசீவகமும் வடபகுதியில் இருந்து தமிழகத்துக்கு வந்தது என்று பலரும் பல காலமாகச் சொல்லி வந்த நிலையில், ஆசீவக சமயம் என்பது தமிழகத்தில்தான் தோன்றியது, அதனை உருவாக்கிய மற்கலி கோசாலர் சங்ககாலப் புலவர் என்றும் அவரே ஐயனாரா…
மாயோன், சேயோன், வேந்தன், வருணர் என நிலத் தெய்வங்கள் இருந்த தொல்காப்பியர் காலத்துத் தமிழ் மண்ணில், பிற்காலத்தில்தான் வைதிகமும் பெளத்தமும் ஜைனமும் ஆசீவகமும் தோன்றின. பெளத்தமும் ஜைனமும்போலவே ஆசீவகமும் வடபகுதியில் இருந்து தமிழகத்துக்கு வந்தது என்று பலரும் பல காலமாகச் சொல்லி வந்த நிலையில், ஆசீவக சமயம் என்பது தமிழகத்தில்தான் தோன்றியது, அதனை உருவாக்கிய மற்கலி கோசாலர் சங்ககாலப் புலவர் என்றும் அவரே ஐயனாராக தமிழ் நிலத்தில் வழிப்பட்டு இன்றும் போற்றிப் பாதுகாக்கப்பட்டு வணங்கப்படுகிறார் என்ற மிக முக்கியமான ஆய்வு நூலை பேராசிரியர் க.நெடுஞ்செழியன் படைத்துள்ளார். தேவிபிரசாத் சட்டோபாத்தியாய, இந்திய தத்துவ இயல் பற்றி எழுதியதில் குறிப்பிடத்தக்கவர் என்றால், பேராசிரியர் க.நெடுஞ்செழியன், தமிழக தத்துவ இயல் பற்றி கனமான ஆய்வுகளைத் தொடர்ந்து செய்து வருபவர்.
இந்திய மெய்யியல் வரலாற்றில் அஜிதகேசம்பாளர், பூமணர், பக்குடுக்கையார், மற்கலிகோசலர் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். இதில் மற்கலிகோசலர்தான் ஆசீவக சமயத்தைத் தோற்றுவித்தவர். அவர் தமிழர்தான் என்பதை தமிழ் மரபு, பெளத்த மரபு, ஜைன மரபு வழிபட்ட ஆதாரங்களுடன் நிறுவுகிறார்.
வடநாட்டில் 3ம் நூற்றாண்டுவரை மட்டுமே இருந்த ஆசீவக சமயம், தென்னகத்தில் 14ம் நூற்றாண்டு வரையிலும் இருந்துள்ளது. ஜைனம், பெளத்தம் தோன்றிய காலத்தில் இந்த சமயம் தோன்றியுள்ளது. வேதத்தையும் வேதப் பண்பாட்டையும் மறுத்து இந்த சமயம் தோற்றுவிக்கப்பட்டு உள்ளது. கொல்லாமையும் புலால் உண்ணாமையும் இதனுடைய நெறியாக இருந்துள்ளன. அதனால்தான் ஐயனார் கோயிலில் பொங்கல் படைப்பது மட்டுமே வழக்கமாக இருந்துள்ளது. அங்கு இருக்கும் கருப்புக்குத்தான் கடா வெட்டுவார்கள். கருப்பு இல்லாத ஐயனார் கோயில்கள் எங்கும் இருக்காது. ''போரில் உயிர்துறந்த வீரர்கள் கருப்புகளாக ஐயனார் கோயில்களில் இடம்பெற்றனர். இந்தக் கருப்புகள் சமகாலத்தவர்கள் இல்லை. காலந்தோறும் மக்களின் மனம் கவர்ந்த வீரர்கள் மறைந்த பின்னர் ஐயனார் கோயில்களில் கருப்புகளானார்கள். அப்படி ஆன கருப்புகளில் மதுரைவீரனும் காத்தவராயனும் அடக்கம். இதனாலும் காவல் தெய்வமாக வணங்கப்படும் 18ம்படிக் கருப்பு ஆசீவகத்தோடு கொண்டுள்ள தொடர்பை உறுதி செய்யலாம்' என்கிறார் க. நெடுஞ்செழியன்.
தமிழர் வாழ்வியலிலும் , இலக்கிய இலக்கண உரைகளிலும் ஆசீவகம் பெற்றுள்ள இடம் மகத்தானதாக உள்ளது. தமிழகப் பக்தி இயக்கங்களின் வரலாற்றில் ஆசீவகம் மையப் புள்ளியாக இருந்துள்ளது. சிவனியம் ஆசீவகத்தை அழித்தும் மாலியம் ஆசீவகத்தை அணைத்தும் வளர்ந்துள்ளன. தஞ்சை பெருவுடையார் கோவில் உள்ளிட்ட தமிழக சிவன் கோவில்கள் பெரும்பாலும் ஒரு காலத்தில் ஆசீவர்கட்கு உரியனவாக இருந்தன என்பதையும் திருவெள்ளறை செந்தாமரைக் கண்ணன் திருக்கோவில் உள்ளிட்ட பல திருமால் கோவில்கள் ஆசீவர்கட்கு உரியனவாக இருந்தன என்பதையும் கள ஆய்வுகள் உறுதி செய்கின்றன. சுருங்கச் சொன்னால் திருநிலை (கசலட்சுமி)க் கென்று எந்தக் கோவில்கள் எல்லாம் ஆசீவகர்கட்கு உரியனவே ஏனெனில் திருநிலை ஆசீவகச் சமயச் சின்னமாகும்.
" ..ஏரிக்கொரு ஐயனார், ஊருக்கொரு பிடாரி என்ற சொலவடைக்கேற்ப தமிழக நிலவிரிவில் ஐயனார் கோயில்கள் பரவலாகக் காணக்கிடைக்கின்றன. இந்தக் கோயில்கள் ஆசீவகம் விட்டுச்சென்ற அடையாளங்கள் என்கிறார் நெடுஞ்செழியன். இந்தப் புள்ளியிலிருந்து ஆசீவகம் தோன்றியது தமிழகத்தில்தான் போன்ற தன் வாதங்களை முன்வைக்கிறார். மகாவீரரின் சம காலத்தவரான மக்கலி கோசலரால் நிறுவப்பட்ட இந்த மதத்துக்கு இந்தியாவில் பரவலாக ஆதரவு இருந்தது. “ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாகத் தமிழர் வாழ்வைச் செம்மைப்படுத்திய சமயம் ஆசீவகம்.
தமிழ் இலக்கிய வரலாற்றிலும் இந்திய சமய வரலாற்றிலும் இந்தச் சமயம் வழங்கிய கொடை மகத்தானது” என்கிறார் நூலாசிரியர். இங்கு உருவாகி இந்தியாவெங்கும் பரவிய இந்தச் சமயத்தின் வரலாற்றில் திருவெள்ளறை ஒரு முக்கியமான இடம். தமிழகத்தில் ஆசீவகத்தின் தொல்லெச்சங்கள் இன்னும் உயிர்த்துடிப்புடன் இருக்கின்றன. ஆகவே, அவை ஆய்வுக்குட்படுத்தப்பட வேண்டும் என்பது ஆசிரியரின் நிலைப்பாடு. இன்று கற்படுக்கைகளுடன் கூடிய சமணக் குகைகள் என்று தொல்லியலாளர்களால் அறியப்படும் பல பாறைக் குடில்கள் ஆசீவகத் துறவிகள் இருந்த இடங்கள்தான் என்பது நெடுஞ்செழியனின் நிலைப்பாடு..."
ஆய்வு கட்டுரைகள்Dr K Nedunchezhiyanமதம்PJJAZYM PublicationsKa.Netunjezhiyanமுனைவர் க. நெடுஞ்செழியன்தமிழர் வரலாறுதத்துவம்வரலாறுReligionதமிழகம்சமயம்க.நெடுஞ்செழியன்Philosophyஆன்மீகம்முனைவர் இரா.சக்குபாய்Historyமெய்யியல்ஆய்வு கட்டுரைதமிழர் பண்பாடுtamil-bookbook
பொன்னியின் செல்வன் - அமரர் கல்கி எழுதிய புகழ் பெற்ற தமிழ் வரலாற்றூப் புதினமாகும். 1950 - 1955 ஆண்டு வரை கல்கி வார இதழில் தொடர்கதையாக வெளியிடப்பட்டது. இப் புதினத்துக்கு…
ஜல்லிக்கட்டு ஒரு வீர நாடகம். அது விளையாட்டும்கூட. புய வலு, தொழில் நுட்பம், சாமர்த்தியம் எல்லாம் அதுக்கு வேண்டும். தான் போராடுவது மனித னுடன் அல்ல, ரோஷமூட்டப்பட்ட ஒரு மிரு…
ராஜராஜ சோழனின் ஆட்சி, பொற்காலம் என்று அழைக்கப்படுகிறது. வலுவான சோழ சாம்ராஜ்ஜியத்தைக் கட்டமைத்தவராக கொண்டாடப்படும் அதே சமயம், மக்கள் நலன் மீது அக்கறை செலுத்திய பேரரசராகவ…
மன்னன் மகள் சாண்டில்யன் எழுதிய வரலாற்றுப் புதினமாகும். இது 72 அத்தியாயங்களைக் கொண்டு ஒரே பாகமாக அமைந்துள்ள நூலாகும். 11ஆம் நூற்றாண்டில், ராஜேந்திர சோழனின் ஆட்சிப் பின்னணிய…
உடையார் (ஒலிப்பு (உதவி·தகவல்)) என்பது பாலகுமாரன் எழுதிய வரலாற்றுப் புதினம் ஆகும். ஆறு பாகங்களை உடைய (177 அத்தியாயங்கள்) இப்புதினம் முதலில் இதயம் பேசுகிறது வார இதழி…
புயலிலே ஒரு தோணி' நாவலின் நாயகன் பாண்டியன் பற்றிய ப.சிங்காரத்தின் புனைவு, கெட்டிதட்டிப்போன தமிழர் வாழ்க்கையின்மீது வீசப்பட்ட பெரிய பாறாங்கல். பொதுப்புத்தி, மதிப்பீடுகளை…
கடல் புறா எழுத்தாளர் சாண்டில்யன் அவர்களால் எழுதப்பட்ட ஒரு வரலாற்றுப் புதினம். சிறீ விசய நாட்டில் இருந்து சோழர் உதவி தேடி இளவரசருக்கும் அவரது மகளுக்கும் சோழ இளவரசரான அந…
இந்திய சரித்திரத்தில் மட்டுமல்ல உலக சரித்திரத்திலும்கூட ராஜிவ் கொலை வழக்குக்கு இணையான இன்னொரு வழக்கு இல்லை. வழக்கின் ஆரம்பப்புள்ளி முதல் முடிவு வரையிலான நேர்மையான அலசல்.…
நாம் அறிந்த தமிழகத்தின் அறியாத பரிமாணம் இந்நூல். ஒரு பொருட்டாக நாம் கருதாத ஒரு செய்தியை எடுத்துக்கொண்டு அதில் வரலாறும் பண்பாடும் எவ்வாறு படிவம் படிவமாகப் படிந்துள்ளன என்…
குமுதம் ரிப்போர்டரில் வெளியான அமெரிக்காவின் அரசியல் வரலாறு. யுத்தங்களை வருமானத்துக்குரியதொரு உபாயமாக நீண்டகாலமாக அமைத்துக்கொண்டு செயல்படும் தேசம் அமெரிக்கா. அதன் பளபள…