ஒருவரை அரசியல்வாதி என்று எதிர்மறையாக மட்டுமே இன்று அழைக்கமுடிகிறது. அந்த அளவுக்கு ஊழலும் சுயநலமும் பதவி ஆசையும் முறைகேடுகளும் அரசியல் களத்தில் பெருகிக் கிடக்கின்றன. இங்கே கால் பதித்தவர்களில் கறை படாமல் இறுதிவரை இருந்தவர்கள் வெகு சொற்பமானவர்கள்தான். அவர்களில் காமராஜர் முதன்மையானவர்.
இப்போது வாசித்தாலும் வியப்பளிக்கக்கூடியது அவர் வாழ்க்கை. காமராஜர் அளவுக்கு மக்களை மெய்யான அக்கறையுடன் நேசித்த, மதித்…
ஒருவரை அரசியல்வாதி என்று எதிர்மறையாக மட்டுமே இன்று அழைக்கமுடிகிறது. அந்த அளவுக்கு ஊழலும் சுயநலமும் பதவி ஆசையும் முறைகேடுகளும் அரசியல் களத்தில் பெருகிக் கிடக்கின்றன. இங்கே கால் பதித்தவர்களில் கறை படாமல் இறுதிவரை இருந்தவர்கள் வெகு சொற்பமானவர்கள்தான். அவர்களில் காமராஜர் முதன்மையானவர்.
இப்போது வாசித்தாலும் வியப்பளிக்கக்கூடியது அவர் வாழ்க்கை. காமராஜர் அளவுக்கு மக்களை மெய்யான அக்கறையுடன் நேசித்த, மதித்த இன்னொரு தலைவர் இன்றுவரை இங்கே தோன்றவில்லை. சாதி, மதம், கட்சி அபிமானம் அனைத்தையும் கடந்து இன்றுவரை அவர் மக்கள் தலைவராக நீடிப்பதற்குக் காரணம் தமிழகத்து மக்கள் அவர்மீது கொண்டிருக்கும் அசைக்கமுடியாத நேசம்தான்.
தூய்மையின் அடையாளமாக, எளிமைக்கு ஓர் உதாரணமாக, எடுத்த காரியத்தை உத்வேகத்துடன் செய்துமுடிக்கும் திறன் பெற்றவராக காமராஜர் இன்று நினைவுகூரப்படுகிறார். இந்திய அளவில் கல்வியில் தமிழ்நாடு முன்னணியில் இருப்பதற்கான அடித்தளத்தை அவர்தான் உருவாக்கிக்கொடுத்தார். தொழில் வளம், உள்கட்டுமானம், பொதுச்சேவைகள், மருத்துவம் என்று அவர் தடம்பதித்த துறைகள் ஏராளம். தமிழகத்தில் மட்டுமல்ல இந்திய அளவிலும் ஓர் தீர்மானகரமான அரசியல் சக்தியாக காமராஜர் திகழ்ந்தார்.
கட்டுக்கோப்பான முறையில் எழுதப்பட்டுள்ள இந்தப் புத்தகம் காமராஜரின் அசாத்தியமான வாழ்வையும் அவருடைய அரசியல் பங்களிப்பையும் எளிமையாக அறிமுகம் செய்துவைக்கிறது. காமராஜர் ஆட்சி எப்படி இருந்தது என்பதையும் மீண்டும் காமராஜர் ஆட்சியைக் கொண்டுவருவோம் என்று இன்றும் கட்சிகள் இங்கே முழங்கிக்கொண்டிருப்பது ஏன் என்பதையும் இதிலிருந்து ஒருவர் அறியமுடியும்.
தமிழகத்தைப் பொருத்தவரை எம்.ஜி.ஆர். என்பது வெறும் நடிகரின் பெயரோ, வெறும் அரசியல்வாதியின் பெயரோ ஏன், வெறும் பெயரோகூட இல்லை. அது ஒரு குறியீடு.இந்த மனிதர்…
ஸ்பெக்ட்ரம் ஊழல் கலர் கலராக ஆடும் இன்றைய காலகட்டத்தில், ‘காமராஜரைப் போல ஒரு அரசியல்வாதி மீண்டும் பிறந்து நாட்டைச் சீர்திருத்த மாட்டாரா’ என ஏக்கத்துடன் எதிர்பார்த்துக் கொண்டு இ…
அர்ஜெண்டினாவில் தொடங்கி சிலி, பெரு, வெனிசூலா, பொலிவியா என்று லத்தீன் அமெரிக்க நாடுகளிடையே எர்னஸ்டோ மேற்கொண்ட பயண அனுபவங்கள் மோட்டார் சைக்கிள் டைரிக் குறிப்புகளாக வெளி…
வேர்களை அறுத்தெரிந்து வெடித்துக் கிளம்பிய ஒரு வித்தாக, சாதியத்தின் கொடிய நரம்புகளை அறுத்துக்கொண்டு தாழ்த்தப்பட்ட 'மகர்' இனத்தின் இருண்ட கருவறையிலிருந்து வெளிவந்த ஒரு விட…
நான்கு தலைமுறைகளாக திரைத் துறையில் ‘சூப்பர் ஹிட்’ பாடல்களைத் தந்துகொண்டு ஒருவர் நிலைத்து நிற்கிறார் என்றால், அவர்தான் நமது ‘வாலிபக் கவிஞர்’ வாலி! திரைத் துறையில் மட்டும் …
இந்திய அரசியல் களத்தில் இவரைப் போல் இன்னொரு புயல் உருவாகவில்லை. உருவாகப்போவதும் இல்லை. அதிகாரம், ஆட்சி, கட்சி அரசியல் அனைத்துமே வெங்காயம்தான் பெரியாருக்கு. மதம், தேசியம்…
பவா எழுதிய கட்டுரைகள் மீடியாவாய்ஸ் இதழில் வெளிவந்தன. அதன்பின் நண்பர் உதயஷங்கர் அதேபோல நினைவுகளை எழுதியிருந்தார். மீடியாவாய்ஸ் ஆசிரியர் ராவ் என்னிடம் அதில் எழுதும்படிக்கோ…
இந்திய மண்ணில் தான் வாழும் காலத்திலேயே தன்னுடைய லட்சியம் நிறைவேறியதை பார்த்துச் சென்றவர்கள் பட்டியலில் மகாத்மா காந்திக்கும், தந்தை பெரியாருக்கும் அடுத்த இடம் ‘இயற்கை வேளாண் வ…
இயேசு பெருமானின் வாழ்க்கை வரலாற்றை நம்முடைய அடையாளமான தாய்மொழியில் காவியமாக்கிய உள்ளார் ஆசிரியர் கண்ணதாசன். வரலாற்று நாயகனான இறைமகன் இயேசு கிறிஸ்துவின் வாழ்வையும், வ…
நாடு என்பது மக்களின் தொகுப்பு; அது நிலங்களின் தொகுப்பு அல்ல. சமூகத்தின் மீது உண்மையான அக்கறை கொண்ட ஒருவர் முதலும் இறுதியுமாய் மக்களுக்குத்தான் விசுவாசமாக இருக்க வேண்டும்…