வாழ்க்கை முழுவதும் யுத்தங்கள்! போராட்டங்கள்! லத்தீன் அமெரிக்க நாடுகள் அனைத்தை யும் அடிமைத் தளையிலிருந்து விடுவிக்கும்வேட்கை. சே ஒரு தனிமனிதரல்லர். ஒரு மாபெரும் நிலப்பரப்பின் மனச்சாட்சி.
பிறப்பால் ஓர் அர்ஜென்டைனர் என்றாலும், ஃபிடல் காஸ்ட்ரோவின் புரட்சிக் குழுவில் இணைந்து, க்யூபாவின் விடுதலைக்காகப் போராடினார். க்யூபா விடுவிக்கப்பட்டதும், சேவுக்குப் பல உயர் பதவிகள் அளிக்கப்பட்டன. ஆனால் நாற்காலியில் …
வாழ்க்கை முழுவதும் யுத்தங்கள்! போராட்டங்கள்! லத்தீன் அமெரிக்க நாடுகள் அனைத்தை யும் அடிமைத் தளையிலிருந்து விடுவிக்கும்வேட்கை. சே ஒரு தனிமனிதரல்லர். ஒரு மாபெரும் நிலப்பரப்பின் மனச்சாட்சி.
பிறப்பால் ஓர் அர்ஜென்டைனர் என்றாலும், ஃபிடல் காஸ்ட்ரோவின் புரட்சிக் குழுவில் இணைந்து, க்யூபாவின் விடுதலைக்காகப் போராடினார். க்யூபா விடுவிக்கப்பட்டதும், சேவுக்குப் பல உயர் பதவிகள் அளிக்கப்பட்டன. ஆனால் நாற்காலியில் உட்கார்ந்து ஆவணங்கள் பார்க்கும் விருப்பம் அவருக்கு இல்லை. உதறித் தள்ளிவிட்டு துப்பாக்கி ஏந்தி பொலிவியாவுக்குச் சென்றார். அடர்ந்த காட்டில் உட்கார்ந்து புரட்சிப் படையை உருவாக்கினார். க்யூபாவுக்காகவும், பொலிவியாவுக்காகவும் சே ஏன் போராட வேண்டும்? இவருடைய எதிரிகள் யார்? சி.ஐ.ஏ.வும் இவரை வலை வீசித் தேடியது ஏன்? இவரைச் சுட்டுக் கொன்றவ ர்கள் யார்?
ஏகாதிபத்தியம் எந்த வடிவத்தில் வந்தாலும் அதை எதிர்க்க வேண்டும். சேவின் வாழ்வு மட்டுமல்ல, அவரது மரணமும் இந்தச் செய்தில் யத்தான் உரக்கச் சொல்கிறது. விடுதலை வேட்கை உள்ள அனைவருக்கும் இந்த நிமிடம் வரை உந்துசக்தியாக விளங்கும் சே குவேராவின் விறுவிறுப்பான வாழ்க்கைவரலாறு இந்நூல்.
உலக வரைபடத்தை மாற்றியமைத்த முதல் பெரும் போர். உலகம் அதுவரை கண்டிராத பேரழிவைக் கொண்டு வந்த போரும்கூட. நூற்றாண்டுகால சாம்ராஜ்ஜியங்கள் உதிர்ந்து சரிந்தன. பிரிட்டனின் சகாப்தம்…
"ரோஹிங்கியா முஸ்லிம்கள்உலகின் அதிகம் துன்புறுத்தப்படும், தொடர்ச்சியாக அழிக்கப்படும் சிறுபான்மைப் பிரிவினரில் ரோஹிங்கியா முஸ்லிம்கள் முதன்மையானவர்கள். யார் இவர்கள்? இவர்களுடைய …
'க்யூபா என்ற தேசத்தின் பெயர் நமக்குப் பரிச்சயமாகக இருப்பதற்குக் காரணம், ஃபிடல் காஸ்ட்ரோ. அவர் இல்லாது போயிருந்தால் அத்தேசம் அமெரிக்காவின் இன்னொரு மாநிலமாகியிருக்கும்.
அறிஞர் அண்ணாவின் வாழ்வையும் பணியையும் இன்றைய தலைமுறைக்கு மறு அறிமுகம் செய்வதே இந்நூலின் நோக்கம். மிகச்சுருக்கமாக எழுதப்பட்டிருப்பினும் இவ்வாழ்க்கை வரலாறு, ஒரு கடலை விழுங்…
என்னை முற்றிலும் புரிந்து கொண்டவர்கள் யாருமில்லை. என் பெற்றோர்கள் கூட என்னைச் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை. ஆகவே மற்றவர்கள் யாராவது என்னைப் புரிந்து கொண்டதாகச் சொன்னால் என்னா…
இந்திய சுதந்தரப் போராட்டத் தலைவர்களிலேயே அதிகம் சர்ச்சைகளுக்கும் விமர்சனங்களுக்கும் உள்ளானவர் சுபாஷ் சந்திரபோஸ். இவரைப் போல் முற்றிலும் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டவர் வேறு யார…
உலகையே கட்டியாளப் போகிறேன் என்று கிளம்பியவர்கள் சிலர். அதில் வெற்றி பெற்றவர்கள் வெகு சிலரே. அவர்களில் முதன்மையானவர் மங்கோலியப் பேரரசர் செங்கிஸ்கான்.
சுமார் எண்ணூறு …
மனித குலம் அறிந்திராத பயங்கரங்களை அநாயசமாக நிகழ்த்திக்காட்டியது இரண்டாம் உலகப்-போர். போரின் மையம் ஐரோப்பா என்றாலும் அது ஏற்படுத்திய பேரழிவும் நாசமும் உலகம் முழுவதையும் உ…
இயேசு பெருமானின் வாழ்க்கை வரலாற்றை நம்முடைய அடையாளமான தாய்மொழியில் காவியமாக்கிய உள்ளார் ஆசிரியர் கண்ணதாசன். வரலாற்று நாயகனான இறைமகன் இயேசு கிறிஸ்துவின் வாழ்வையும், வ…
உலகின் ஒவ்வொரு கோடியிலும் விடுதலை வேட்கையுள்ள எத்தனையோ ஆயுதப் போராட்டக் குழுக்கள் பரவியுள்ளனர். ஆனால் விடுதலைப் புலிகள் (எல்.டி.டி.ஈ) மிகவும் வித்தியாசமானவர்கள். அவர்கள…
வனவாசத்தில் எல்லா உண்மைகளையும் நான் பகிரங்கமாகச் சொல்லிவிட்டதுபோல் பல பேருக்கு ஒரு பிரமை.
உண்மையில் சில விஷயங்களை மறைத்திருக்கிறேன். மனிதன் மான வெட்கத்துக்கு அஞ்சி மறைத்த…