உலகையே கட்டியாளப் போகிறேன் என்று கிளம்பியவர்கள் சிலர். அதில் வெற்றி பெற்றவர்கள் வெகு சிலரே. அவர்களில் முதன்மையானவர் மங்கோலியப் பேரரசர் செங்கிஸ்கான்.
சுமார் எண்ணூறு வருடங்களுக்கு முன் வாழ்ந்தவர் என்றாலும் இன்றுவரை செங்கிஸ்கான் மீதான மிரட்சியும் ஆச்சரியமும் அச்சமும் குறையாமலிருப்பதற்கான காரணம், உயிரை உலுக்கும் போர்த் தந்திரங்கள் மட்டுமல்ல. அவரது ஆளுமைத் திறனும்தான்.
ஒரு சாதாரண மங்கோலிய நாடோடிக் கூட…
உலகையே கட்டியாளப் போகிறேன் என்று கிளம்பியவர்கள் சிலர். அதில் வெற்றி பெற்றவர்கள் வெகு சிலரே. அவர்களில் முதன்மையானவர் மங்கோலியப் பேரரசர் செங்கிஸ்கான்.
சுமார் எண்ணூறு வருடங்களுக்கு முன் வாழ்ந்தவர் என்றாலும் இன்றுவரை செங்கிஸ்கான் மீதான மிரட்சியும் ஆச்சரியமும் அச்சமும் குறையாமலிருப்பதற்கான காரணம், உயிரை உலுக்கும் போர்த் தந்திரங்கள் மட்டுமல்ல. அவரது ஆளுமைத் திறனும்தான்.
ஒரு சாதாரண மங்கோலிய நாடோடிக் கூட்டத்தில் செங்கிஸ்கான் பிறந்தபோது, மங்கோலியா என்ற ஒரு தேசமே கிடையாது. செங்கிஸ்கான் ஒரு கனவு கண்டார். சிதறிக் கிடக்கும் இனக்குழுக்களை ஒன்று சேர்க்க வேண்டும். புத்தம் புதிய தேசத்தை உருவாக்கவேண்டும். உலகமே அண்ணாந்து பார்த்து வியக்கும் வகையில் ஒரு மகா பேரரசைக் கட்டியமைக்கவேண்டும்.
அசாதாரணமான கனவு. ஆனால் அதை நிறைவேற்றுவதற்கான துடிதுடிப்பும் துணிச்சலும் உத்வேகமும் உக்கிரமும் செங்கிஸ்கானிடம் இருந்தது. கடுமையும் கல்பாறை மனமும் கொண்டவராகத் தன்னை உருமாற்றிக் கொண்டார். எதிரிகளை அழித்தொழிப்பதற்கான சூத்திரங்களை மட்டுமல்ல, கனவுகளைச் சாத்தியமாக்குவதற்கான கலையையும் செங்கிஸ்கானிடம் இருந்தே கற்றுக்கொண்டது உலகம். செங்கிஸ்கான் பற்றி தமிழில் வெளிவரும் முதல் நூல் இது.
பாகிஸ்தான் அரசியலைக் குறித்துப் பேசும் தமிழின் முதல் நூல் இதுதான்.
காஷ்மீரில் நடப்பது சுதந்தரப் போராட்டம் என்று திரும்பத் திரும்ப அழுத்தம் கொடுத்துச் சொல்லிக்கொண்டிர…
ராஜேந்திரரின் ஆட்சி காலத்தில் சோழ நாடு சிறப்புடன் இருந்தது. சோழநாடும் கீழைச் சாளுக்கியமும் நட்பாக இருந்தாலும், மேலைச் சாளுக்கியம் கீழைச் சாளுக்கியத்தை வளைக்க முயற்சி செய்…
அத்தியாயம் பூங்குழலியில் ஆரமித்து அபய கீதம் வரை 53 அத்தியாயங்களை உள்ளடக்கியது இரண்டாம் பகுதியான சுழற்காற்று. கோடிக்கரையில் வந்தியத்தேவன் பூங்குழலியை சந்தித்து, ஈழத்திற்கு…
என்னை முற்றிலும் புரிந்து கொண்டவர்கள் யாருமில்லை. என் பெற்றோர்கள் கூட என்னைச் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை. ஆகவே மற்றவர்கள் யாராவது என்னைப் புரிந்து கொண்டதாகச் சொன்னால் என்னா…
ஆவுல் பக்கீர் ஜெனுலாபுதீன் அப்துல் கலாம் நமது தாயகத்தின் பெருமையைத் தலைநிமிரச் செய்த மேதை... நாட்டின் பாதுகாப்பிற்கு வானத்தில் வேலி கட்டியவர். இந்தப் 'பாரதரத்னத்தின்' அறிவ…
செவ்வியல் பண்புகளைக் கொண்ட ‘கருக்கு’ செவ்வியல் பதிப்பாக ஒவ்வொரு தசாப்தத்திலும் வெளிவர வேண்டும் என்றே நான் கருதுகிறேன். காரணம் நாம் சரித்திரத்தை வெகு வேகமாக மறப்பவர்கள். கு…
எகிப்தின் மாபெரும் பேரரசியாக, மயக்கும் பேரழகியாக, ஆகச் சிறந்த காதலியாக கிளியோபாட்ராவைக் கொண்டாடும் அதே வரலாறு, அவளை ஆதிக்க வெறி கொண்டவளாக, அகந்தை நிறைந்தவளாக, ஒழ…
ஆனந்த விகடனில், மாலியில் தொடங்கி ராஜு, கோபுலு என்று வழிவழியாக வந்த ஒளிமயமான நகைச்சுவை ஓவியர் மற்றும் கார்ட்டூனிஸ்ட்களில் மதன் முக்கியமான அங்கம். பொதுவாக கார்ட்டூனிஸ்ட்கள்…
சிவகாமியின் சபதம், கல்கி எழுதிய புகழ் பெற்ற தமிழ் புதினமாகும். 12 வருடங்களாக கல்கி வார இதழில் தொடர்கதையாக வெளிவந்த இக்கதை பிறகே ஒரு புதினமாக வெளியிடப்பட்டது.