ஒரு தனி மனிதனால் உலகையே அச்சுறுத்த முடியும், உலக சரித்திரத்தையே புரட்டிப்போட முடியும் என்பதை நிரூபித்துக் காட்டியவர் அடால்ஃப் ஹிட்லர். இத்தனைக்கும் நமக்கு மிகச் சமகாலத்தில் வாழ்ந்து மறைந்தவர்தான் ஹிட்லர். ஆனாலும், நம்மால் நினைத்தே பார்க்க முடியாத அசாதாரணமான வாழ்க்கையை அவர் வாழ்ந்திருக்கிறார். இரண்டாம் உலகப் போரை ரிப்பன் வெட்டி ஆரம்பித்து வைத்தவர் ஹிட்லர்தான். கண்மூடித் திறப்பதற்குள் ஐரோப்பாவைச் ச…