இந்திரா சௌந்தர்ராஜன் (பி. நவம்பர் 13 1958) ஒரு தமிழக எழுத்தாளர். இவரது இயற்பெயர் பி சௌந்தர்ராஜன். சிறுகதைகள், நாவல்கள், தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் திரைக்கதைகள் எழுதிவரும் இவர் தமிழ் வாசகர்களால் நன்கு அறியப்பட்டவர். இவர் மதுரையில் வசித்து வருகிறார்.
இவர் தென்னிந்திய இந்துமத பாரம்பரியம் மற்றும் புராண இதிகாசங்களைக் கலந்து எழுதுவதில் வல்லவர். இவருடைய கதைகள் பொதுவாக அமானுட நிகழ்வு, தெய்வீக தலையீடு, மறுபிறவி, பேய்கள் போன்ற விஷயங்களை உள்ளடக்கியிருக்கும். இவர் கதைகள் தமிழ் நாட்டின் பல பகுதிகளில் வாழும் மக்கள் தெரிவித்த உண்மை நிகழ்வுகளின் அடிப்படையிலும் அமைந்துள்ளன.
இவருடைய இரண்டு அல்லது மூன்று புதினங்களாவது ஒவ்வொரு மாதமும் கிரைம் ஸ்டோரி மற்றும் இன்றைய கிரைம் நியூஸ் போன்ற பதிப்பாளர்களால் வெளியிடப்படுகின்றன.